ஜோதி குமாரி
கொரோனா தொற்று காரணமாக" இந்தியாவின் பெரிய நகரங்கள் மூடப்பட்டன' தொலைதூர கிராமங்களில் இருந்து பலர் இந்த நகரங்களுக்கு வந்து வேலை செய்தனர்' இந்த அடைப்பு காரணமாக" இந்த மக்கள் பணம் மற்றும் உணவு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்'
அவ்வாறு புதுடில்லி நகரில் ஒரு மனிதர் கூலி வேலையில் ஈடுபட்டு வந்தார்' ஒரு புண் ஏற்பட்டிருந்த காரணத்தால் அவரால் நடக்க முடியாத நிலையில் இருந்தார்' அவர்களது கிராமம் புதுடில்லியிலிருந்து 700 மைல் தொலைவில் அதாவது 1126 கி'மீ தொலைவில் இருந்தது' இந்த சமயத்தில்" அவரது மகள் தன் தந்தையை கிராமத்திற்குக் கூட்டிச்செல்லும் பொறுப்பை தைரியமாக ஏற்றுக்கொள்கிறாள்' அவள் தான் ஜோதிகுமாரி" வயது 15'
கையில் மிச்சமிருந்த கடைசிப் பணத்தில் ஒரு சைக்கிளை வாங்கி கொண்டு அப்பாவை ஏற்றிக்கொண்டு 1000 கி'மீ' க்குமேல் சைக்கிள் ஓடி தாண்டி கிராமத்திற்கு வருகிறாள்' இப்பயணத்தின் போது" இவர்களுக்கு பலர் உதவி செய்தனர்" அவர்களுக்கு உணவு அளித்தனர்' பெண்களால் இந்தப்பயணத்தை மேற்கொள்ள முடியாது என்று சிலர் கேலியும் செய்தனர்'
எத்தனை முறை அவள் சோர்வும்" தாகமும்" மன உளைச்சலும் அடைந்திருப்பாள்? இந்தப் பயணத்தைக் கைவிட அவள் எத்தனை முறை நினைத்திருப்பாள்?