செப்டம்பர் மாதம் ஒரு நாள் காலை சீனாவில் இருந்து ஒரு திபெத்திய துறவி அமெரிக்கா வந்தடைந்தார்' 3 நாட்களும்" 7,000 மைல்களும் நீடித்த விமானப் பயணம் அது' பல வருடங்கள் தியானத்தில் இருந்த ஒருவர் தான் அவர்'
அவரது பெயர் மின்கியூர் ரின்போச்சே - (MINGYUR RINPOCHE)' அவர் தியானம் செய்யும் போது மூளையில் மின் அலைகளில் மாற்றம் உள்ளதா என்பதை அறிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்'
மின்கியூர் தேரர் தியானத்தைத் தொடங்கியபோதே கம்ப்யூட்டர் மானிட்டர்கள் திடீரென அவரது மூளை சமிக்ஞைகளில் ஒரு பெரிய மின் அலைச் செயல்பாட்டைக் காட்டின' இந்த மின்அலைச் செயல்பாடு தியான நேரம் முழுவதும் நிலைத்து இருந்தது' இவ்வாறான ஒன்றை விஞ்ஞானிகள் இதற்கு முன் பார்த்ததில்லை'